என்னது வலிமை படத்தின் இசையமைப்பாளர் மாற்றமா ? – யுவன் தரப்பு பதில் !

வலிமைப் படத்தின் இசையமைப்பாளராக டி இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.

நேர்கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித்- ஹெச் வினோத் கூட்டணி இப்போது வலிமை படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் முடித்துள்ள படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்புக்கான வேலைகளில் மும்முரமாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பதில் டி இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக வதந்தி ஒன்று பரவியது. ஆனால் இதை யுவன் தரப்பு மறுத்துள்ளது.

Published by
adminram