கமல் தயாரிப்பில் நடிக்க இருந்த படம் என்ன ஆச்சு? தர்ஷனின் அதிரடி அறிவிப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது கமல்ஹாசன் தயாரிப்பில் தர்ஷன் நடிப்பில் ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தான் அந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சியால்தான் தர்ஷனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் பெருமையுடன் கூறியிருந்தார்
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும் தர்ஷன் நடிப்பில் கமல் தயாரிக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கூட இன்னும் தொடங்கவில்லை. எனவே இந்த படம் கிட்டத்தட்ட கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது
இந்த நிலையில்தான் தர்ஷன் தான் நடிக்கவிருக்கும் முதல் படத்தில் இன்று கையெழுத்திட்டதாக வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் டீம் தனது கிடைத்தது கடவுளின் கருணை என்றும் முதல் படமே தனக்கு பிரம்மாண்டமான படமாக அமையவிருப்பது ரசிகர்களின் ஆசிர்வாதம் என்றும் கூறியுள்ளார்
இந்த படத்தின் பஸ்ட் லுக் இன்னும் ஒருசில நாட்களில் வெளியாக இருப்பதாகவும் அப்போது இந்த டீமை பார்த்து ரசிகர்களாகிய நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள் என்றும் அவர் கூறியுள்ளார் தர்ஷன் நடிக்கவிருக்கும் அந்த பிரம்மாண்டமான தயாப்பில் படம் என்ன? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
View this post on InstagramMy life has been blessed. Thank you so much so much guys❤️. Love you all
A post shared by Tharshan Thiyagarajah (@tharshan_shant) on