‘டாக்டர்’ படத்தின் 11.03 ரகசியம் என்னவாக இருக்கும்?

இந்த நிலையில் நேற்று காலை 11.03 மணிக்கு ’டாக்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்தது. இதற்கு முன்னர் ’டாக்டர்’ படத்தின் அறிவிப்பு மற்றும் டைட்டில் லுக், மற்றும் முதல் போஸ்டர் ஆகியவையும் அதே 11.03 மணிக்கு தான் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இதனையடுத்து நேற்றும் 11.03 மணிக்கு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளதால் இந்த 11.03-ல் ஒரு ரகசியம் ஒளிந்திருப்பதாக கூறப்பட்டது. இதனையடுத்து இதுகுறித்து தற்போது ஒருசில தகவல்கள் கிடைத்துள்ளது

இந்த படத்தில் ஒரு முக்கிய காட்சி 11.03 மணிக்குத்தான் நடப்பதாகவும் அதனை அடுத்தே இந்த படத்தின் புரமோஷன் அனைத்துமே 11.03 மணிக்கு வெளியாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருந்த போதும் கோலிவுட்டில் உள்ள ஒரு சிலர் இதனை வெளியிட்டு விட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் இருப்பதாக தெரிகிறது. டாக்டர் படத்தில் 11.03 இல் அப்படி என்ன அதிசயம் நடக்கும் என்பதை அறிய சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Published by
adminram