இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் 1000 ஐ தாண்டியும், தமிழகத்தில் எண்ணிக்கை 67 ஆகவும் உள்ளது. இந்தியாவில் இதுவரை பலி எண்ணிக்கை 27 ஆகவும் உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் அனைவரும் வீடுகளிலேயெ முடங்கியுள்ள நிலையில் பொழுதுபோக்குக்காக அதிகளவு மொபைல் போன்களையும் இண்டர்நெட்டையும் அதிகளவு சார்ந்து இருக்கின்றனர். இதனால் அதிக இணையப் பயன்பாட்டால் வாட்ஸ் ஆப்பின் சர்வர் ஹேங் ஆக ஆரம்பித்துள்ளது. இதை முன்னிட்டு வாட்ஸ் ஆப் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் இனி தங்கஸ் ஸ்டேட்டஸ் வீடியோக்களை 15 வினாடிகள் மட்டுமே வைக்கமுடியும் என அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக ஸ்டேட்டஸ் வீடியோக்கள் 30 வினாடிகள் வைக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதி…
தமிழில் நல்ல…
Surya: சூர்யா…
விடாமுயற்சி படத்தின்…
Gossip: தமிழ்…