அட்றா சக்க! ரஜினி 168 திரைப்படத்தில் இணைந்த இளம் நடிகர்…

தர்பார் திரைப்படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் மீனா, குஷ்பு,கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்கவுள்ளது. 

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சித்தார்த் இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ரஜினியின் மகளாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதால், அனேகமாக அவருக்கு ஜோடியாக சித்தார்த் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
adminram