தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக உயர்ந்திருப்பவர் யோகிபாபு. இவர் இல்லாத திரைப்படங்களே இல்லை என்கிற அளவுக்கு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த கோலமாவு கோகிலா திரைப்படம் ரசிகர்களிடம் அவரை கொண்டு சேர்த்தது.
அதேபோல், கிரிக்கெட்டில் ஒரு இடத்தை பிடித்திருப்பவர் தமிழகத்தை சேர்ந்த நடராஜன். இந்திய போட்டிகளில் விளையாடி வருகிறார். ஒரு தமிழர் இந்திய கிரிக்கெட்டில் முக்கிய இடத்தை பிடித்திருப்பது தமிழர்களுக்கு பெருமைபடும் விஷயமாக மாறியுள்ளது.
இந்நிலையில், நடராஜனும், யோகிபாபுவும் சமீபத்தில் ஒரு உணவகத்தில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கிரிக்கெட் வீரரை ஏன் யோகிபாபு சந்திக்க வேண்டும் என யோசிக்கிறீர்களா? அதற்கு காரணம் இருக்கிறது. பலருக்கும் தெரியாத விஷயம் யோகிபாபு ஒரு கால்பந்து வீரர் என்பது. வாலிப வயதில் மாவட்ட அளவில் நடைபெற்ற பல போட்டிகளில் யோகிபாபு விளையாடியுள்ளார். அதன்பின்னர் சினிமா ஆர்வம் ஏற்பட்டு திரைத்துறைக்கு வந்துவிட்டார்.
விஜய் தொலைக்காட்சி…
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…