மாஸ்டர் செகண்ட்லுக் போஸ்டர் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் அனிருத் இசையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பொங்கல் முடிந்தவுடன் நடைபெற இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது 

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 60% மட்டுமே முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் முழு வியாபாரம் முடிந்து விட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழுவினர் துரிதமாக தொடங்கியுள்ளனர் 

ஏற்கனவே வெளிவந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து இரண்டு நாட்கள் டிரெண்ட் ஏற்படுத்திய நிலையில் தற்போது நாளை மாலை 5 மணிக்கு இந்த படத்தின் இரண்டாம் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த செகண்ட் லுக் போஸ்டரில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Published by
adminram