ரஜினியை இயக்கும் இயக்குனர்கள் எப்போது திருந்துவார்கள்?

Published on: January 9, 2020
---Advertisement---

979b8c7fc2ed95c05c546f1d6f64037f

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இரண்டாம் பாதி மிகவும் சுமாராக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர் 

இந்த நிலையில் ரஜினியை இளமையாக, ஸ்டைலாக, அழகாக பல படங்களில் பார்த்து விட்டோம். அதையே மீண்டும் மீண்டும் காட்ட வேண்டுமா? அவருடைய வயதுக்கு தகுந்த வேடத்தை கொடுக்கலாமே? என்று உண்மையான ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 

ஹிந்தியில் அமிதாப்பச்சன் தனது வயதுக்கேற்ற கேரக்டரை ஏற்று நடிப்பது போல் ரஜினியும் தனது வயதுக்கேற்ற வயதான வேடத்திலும் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தலாமே? அப்படி ஒரு கேரக்டரில் ரஜினி நடிக்க தயங்குவது ஏன்? அல்லது ரஜினியின் வயதுக்கேற்ற கேரக்டரை அமையும் வகையில் இயக்குனர் கதையை சிந்திக்க மறுப்பது ஏன்? என்பது புரியாத புதிராக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரஜினியை என்னதான் இளமையாக காண்பித்தாலும் அவருக்கு 70 வயது என்பது நம் மனதில் ஆழமான பதிந்த விஷயத்தை யாராலும் அழிக்க முடியாது. எனவே அவருடைய வயதுக்கேற்ற கேரக்டரை கொடுத்தால் ரஜினி ரசிகர்கள் அவரை இளமையாக பார்த்து ரசிப்பதை விட திருப்தி அடைவார்கள் என்பது தான் உண்மையான நிலை. இதனை இனிவரும் இயக்குனர்களாவது பின்பற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Comment