தளபதி விஜய்யின் திரையுலக தம்பி யார்? சூர்யாவின் டுவிட் ஏற்படுத்திய பரபரப்பு!

தளபதி விஜய்யின் திரையுலக தம்பி யார் என்பது குறித்து நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான மான்ஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து அவர் தற்போது ராதாமோகன் இயக்கத்தில் ஒரு படமும் ’இரவைக்காலம்’ என்ற படத்திலும் அமிதாப்புடன் ‘உயர்ந்த மனிதன்’ என்ற படத்திலும் நடித்து வருகிறா.ர்

இந்த நிலையில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருப்பது யார் என்பது குறித்து தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள எஸ்ஜே சூர்யா, அந்த நபர் குறித்து சில பில்டப்புகளையும் தெரிவித்துள்ளார் 

இந்த படத்தின் போஸ்டரை அமிதாப்பச்சன் வெளியிடலாம் என்றும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிடலாம் என்றும், தளபதி விஜய் வெளியிடலாம் என்றும் பரிசீலனை செய்யப்பட்டது. ஆனால் இவர்களைவிட அமிதாப் பச்சனுடன் நடித்தவரும் தலைவர் ரஜினியின் மருமகனும் தளபதி விஜய்யின் திரையுலக தம்பியுமான தனுஷ்தான் வெளியிடுகிறார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் 

தனுஷை தளபதி விஜய்யின் திரையுலக தம்பி என்று எஸ்.ஜே.சூர்யா குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு, தனுஷ் ரசிகர்கள் எஸ்.ஜே.சூர்யாவுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Published by
adminram