More

சந்திரமுகி வேடம் தரிக்க போவது யார்? சிம்ரன் பரபரப்பு பதில்!

சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் சந்திரமுகியாக ஜோதிகாவுக்கு பதில் சிம்ரன் நடிக்க உள்ளதாக வெளியான செய்தியை அவர் மறுத்துள்ளார்.

Advertising
Advertising

சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது உருவாக இருக்கிறது. அந்த படத்தில் ரஜினி நடித்த கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். வடிவேலுவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கவில்லை என்றும் அவருக்குப் பதில் சிம்ரன் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் இந்த செய்தியை சிம்ரன் இப்போது மறுத்துள்ளார். அவர் தனது சமூகவலைதளப்பக்கத்தில் ‘சந்திரமுகி 2’ படத்தில் நான் நடிப்பதாக வெளிவந்த தகவல் முற்றிலும் தவறானது என்றும் தன்னிடம் படத்தின் குழுவினர் யாரும் இதுகுறித்து அணுகவில்லை என்றும் இப்போது வரை நான் அந்த படத்தில் நடிக்கவில்லை” என விளக்கம் அளித்துள்ளார்.

Published by
adminram

Recent Posts