சயிண்டிஸ்ட்டா இவர் ? ‘நாயகி’ தொடர் வித்யா பிரதீப்பின் இன்னொரு முகம் !

நாயகி தொடரின் மூலம் தொலைக்காட்சி சீரியல் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள வித்யா பிரதீப் கண் மருத்துவம் தொடர்பாக ஆராய்ச்சி செய்துவருகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

சினிமாவின் மூலம் அறிமுகமாகி இப்போது நாயகி தொடரின் மூலம் பிரபலமாகியுள்ளவர் வித்யா பிரதீப். தொலைக்காட்சி தொடரில் பிஸியாக இருக்கும் இவரின் இன்னொரு முகம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கண் மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் இவர், அதற்கான முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

மேலும் சென்னையில் உள்ள பிரபல கண் மருத்துவமனையில் பணியாற்றியும் வருகிறார். நடிப்பு , மருத்துவம் என இரு துறைகளிலும் ஆர்வமாக இருப்பதாகவும் இரண்டிலுமே கவனம் செலுத்தப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Published by
adminram