மீண்டும் தொடங்கும் சிம்புவின் மஃப்டி ரீமேக்… இயக்குனராக இவரா?
சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான முஃப்தி திரைப்படம் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
கன்னடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் மஃப்டி என்ற படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதை இயக்குனர் நரதன் இயக்கியிருந்தார். அந்த படத்தை சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக்கை வைத்து தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இதையடுத்து சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால் அதன் பிறகு சிம்பு தன் வேலையைக் காட்ட ஆரம்பித்ததால் படம் பாதியிலேயே நின்றது.
அதனால் இந்த படமே டிராப் செய்யப்பட்டு விட்டதாக ஞானவேல்ராஜா அறிவித்தார். ஆனால் இப்போது அந்த படத்தை மீண்டும் தொடங்க உள்ளாராம் ஞானவேல் ராஜா. ஆனால் முன்பு படத்தை இயக்கிய நரதன் அந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம். அவருக்கு பதிலாக ஜில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா மீதிப் படத்தை இயக்க உள்ளாராம்.