90ல் ரிலீஸான மெஹா ஹிட் காமெடி படத்தின் இயக்குனர் இவரா?

by adminram |

c7d95cbe1f7ac6c4ea3990a944d17807-1

தமிழ்சினிமாவில் நகைச்சுவை படங்களுக்கு என்று என்றுமே ஒரு தனி கூட்டம் இருக்கும். அதுதான் வெற்றி பெறச் செய்யும்.

பெரும்பாலும் பொழுதுபோக்கு என்ற அம்சத்தில் தான் சினிமா இடம்பெறுகிறது. மனதை ரிலாக்ஸ் படுத்தவே பெரும்பாலானோர் திரையரங்கு பக்கம் தலைகாட்டுகின்றனர். அதிலும் நகைச்சுவை அம்சங்கள் நிறைந்த படம் என்றால் செம சூப்பராக இருக்கும். வயிறு குலுங்க சிரிக்கும்போது உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமாகும்.

உடலும் மனதும் லேசாக மாறும்போது நமக்கு ஒரு புத்துணர்வு கிடைக்கிறது. இந்த கருத்தை மையமாக வைத்தே ரசிகர்களை திரையரங்கு பக்கம் இழுக்க நகைச்சுவை கலந்த கதைகளைத் தேர்வு செய்து கதாநாயகர்களே நடிக்கின்றனர். அந்த வரிசையில் சத்யராஜ் மிக முக்கியமானவர். அவரது படங்களில் அவரே பெரிய லொள்ளு பார்ட்டி என்பதால் காமெடி சும்மா அள்ளும். அந்த வகையில் பல படங்களில் அவர் நடித்துள்ளார்.

036138ae67fdc776f90540f94ef2461c

இவற்றில் குறிப்பிடத்தக்க படம் மல்லுவேட்டி மைனர். இந்தப்படத்தின் கதை நகைச்சுவை கலந்தது. இளையராஜாவின் இன்னிசையில் படம் பட்டையைக் கிளப்பியது. சத்யராஜூடன் சீதா, ஷோபனா, வினுசக்கரவர்த்தி, வெண்ணிற ஆடை மூர்த்தி, செந்தில், சின்னிஜெயந்த், தியாகு, பயில்வான் ரங்கநாதன், எம்.ஆர்.கே.கோகிலா, காந்திமதி, குட்டி பத்மினி என பெரிய நகைச்சுவை பட்டாளமே நடித்துள்ளது. அடி மத்தாளம், சின்ன மணி, ஜலக்கு ஜலக்கு, காத்திருந்த மல்லி மல்லி, மனசுக்குள்ளே, உன்ன பார்த்த ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இப்படம் 1990ல் ரிலீஸ் ஆனது.

கதை இதுதாங்க...

மாரப்பன் கவுண்டர் மகன் ராசப்ப கவுண்டராக படத்தில் வரும் சத்யராஜ் மல்லு வேட்டி மைனராக அதகளப்படுத்துகிறார். மறைந்து போன தந்தையின் ஜொள்ளு பாட்டிகளுக்காக பென்சன் பணத்தை அனுப்புகிறார். ஷோபனாவுடன் சின்ன சின்ன லடாய்களுக்கு இடையில் லவ்வு வருகிறது.
வழுக்கு மரம் ஏறி செயினை எடுக்கும்போது ஷோபனாவின் சவாலில் ஜெயித்து தான் ஒரு மல்லு வேட்டி மைனர் தான் என நிரூபித்து விடுகிறார். அப்போது வீரம் நம்ம பரம்பரை ரத்தத்துல ஓடுதுங்கறத இப்பவாவது ஒத்துக்கறியா?

அப்போது சுயம்வரத்திற்காக சங்கிலியைச் சுழற்றி வீசுகிறார். அது ஷோபனாவின் கழுத்தில் விழுகிறது. பொண்ணுண்ணா நாலு இருக்கணும். இங்க மூணு தான் இருக்கு என்று நக்கலாக சொல்லி விட்டு செல்கிறார். இதனால் ஷோபனாவின் மனம் புண்படுகிறது. இதில் அவர் ஒரு சவால் விடுகிறார். என்ன அவர் பொண்ணு தான்னு அவர் வாயாலேயே நான் சொல்ல வைக்கிறேன் என்கிறார்.

இந்த நிலையில் அந்த ஊருக்கு புதிதாக ஒரு டீச்சர் வருகிறார். அவரை பொண்ணு பார்க்க நம்ம மைனர் வருகிறார். சத்யராஜோ எதிர் வீட்டில் இருக்கும் ஷோபனாவை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்பதற்காக அவரை வெறுப்பேற்றி வம்பிழுக்க இந்த பொண்ணைப் பார்க்க வருகிறார். இந்த டீச்சர் தான் சீதா. ஆனால் சத்யராஜோ அந்த வீட்டின் நிலையைப் பார்த்ததும் சீதாவிடம் தான் பொண்ணு பார்க்க வரவில்லை என தெளிவாக சொல்லி விடுகிறார்.

வீட்டை விட்டு வெளியே வரும் போது மைனரைப் பார்க்கும் வினுச்சக்கரவர்த்தி அவர் மீது பழி சுமத்துகிறார். சீதாவை பலாத்காரம் பண்ணியதாக ஊருக்கு மத்தியில் சொல்லி, சீதாவின் பெயரை அவமானப்படுத்துகிறார். தன்னால் வந்த இந்த பழிச் சொல்லைப் போக்க சத்யராஜ் அவரது கழுத்தில் தாலி கட்டுகிறார். வெண்ணிறஆடை மூர்த்தியும், வினுசக்கரவர்த்தியும் சத்யராஜைப் பற்றி சீதாவின் தந்தையிடம் பலமாக போட்டுக் கொடுக்கின்றனர்.

b0bfccee983ec0caa2f28fb60432af33-1

சீதாவோ தந்தையிடம் சத்யராஜின் உண்மை உள்ளத்தைப் புரிய வைக்கிறார். தட்டு மாற்றும் நேரம் சீதா சத்யராஜிடம் இதுவரை கண்ணனாக இருந்த நீங்கள், கல்யாணத்துக்கு அப்புறம் ராமனா மாறுவேன்னு சத்தியம் பண்ணிக் கொடுங்க என சொல்கிறார். சத்யராஜூம் அப்படியே செய்கிறார். இதைப் பார்த்ததும் ஷோபனா ஓடோடி வந்து தடுக்க வருகிறார். அதற்குள் சத்தியம் பண்ணி விடுகிறார் சத்யராஜ். சீதாவுடன் கல்யாணம் இனிதே நடந்து முடிகிறது.

ஒரு கட்டத்தில் சத்யராஜ் மகன் தந்தை சொல்லியபடி ஷோபனாவிடம் சென்று ஒரு முத்தம் கொடுக்கிறார். அதிர்ச்சியில் உறைந்து போகிறார் ஷோபனா. ஒரு கட்டத்தில் அவரை பழி வாங்க நினைக்கும் ஷோபனா சத்யராஜ் தன்னைக் கெடுத்ததாக ஊரார் முன்னிலையில் சொல்கிறார். உடனே ஷோபனா அவரிடம் என்னைத் தொடலன்னு அவரை சொல்ல சொல்லுங்க என சவால் விடுகிறார். அவரும் பதிலுக்கு தொட்டேன். ஆனால்...என இழுக்கிறார். உடனே சீதா, ஷோபனாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தன் வீட்டில் இருக்க வைத்து விடுகிறார்.

இப்போது சத்யராஜ் மனம் மாறி ராமனாகும் வேளையில் இது போன்ற காட்சிகள் நடக்கிறது. சீதாவும் ஷோபனாவை நன்கு கவனித்துக் கொள்கிறார். இதற்கிடையில் வினுசக்கரவர்த்தி ஷோபனாவின் கழுத்தில் தாலி கட்டச் சொல்லி சத்யராஜைக் கட்டாயப்படுத்துகிறார். மனைவியே சம்மதித்தாலும் சத்யராஜ் முடியாது என மறுக்கிறார். ஷோபனாவும் சத்யராஜின் தூய உள்ளத்தை உணர்ந்து அவரை தனது புருஷனாக மதித்து வாழ ஆரம்பிக்கிறார். கடைசியில் ஷோபனாவை மணமுடித்தாரா இல்லையா என்பதை வெண்திரையில் காணலாம்.

படத்தின் கதையில் அவ்வப்போது டுவிஸ்ட் வந்து கொண்டே இருக்கிறது. இதுவே கதையின் போக்கை சுவாரசியமாக மாற்றுகிறது. சத்யராஜின் நக்கலான பேச்சும் படத்திற்கு பிளஸ் பாயிண்டாகிறது. இதனால் படம் சக்கை போடு போடுகிறது. அக்கால இளைஞர்கள் இந்தப்படம் பார்க்க கூட்டம் கூட்டமாக வந்தனர். சத்யராஜ் மைனராகவே வாழ்ந்து காட்டினார். க்ளைமாக்ஸ் காட்சியில் ஒரு பொம்பள அழறதுக்கு 1008 காரணங்கள் இருக்கலாம்.

10ba793fd860b9705ce316329655d35b

ஆனால், ஒரு ஆம்பள அழறதுக்கு ஒரே காரணம் பொம்பளதான் என அடித்துச் சொல்லும்போது திரையரங்கம் அதிர்கிறது. இப்படி ஒரு சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குனர் யார் தெரியுமா? தற்போது நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறக்கும் மனோபாலா தான்.

Next Story