ஹீரோ இவரா? சும்மா பின்னி பெடலெடுப்பாரே! ஹிந்தியில் உருவாகும் ஒத்த செருப்பு

கடந்த வருடம் பார்த்திபனின் நடிப்பு, இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஒத்த செருப்பு.

d5d8f9b8f035b0b0961ee75438d10869

பாடல்கள், சண்டைக்காட்சி இல்லாமால், ஏன் வேறு நடிகர்கள் யாரும் இல்லாமல் திரையில் பார்த்திபன் மட்டுமே நடித்திருந்த திரைப்படமாக அப்படம் அமைந்திருந்தது. அதேநேரம், குரல் மூலம் மற்ற நடிகர் அங்கே இருப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்தி பார்த்திபன் அசத்தியிருந்தார். இப்படம் பல விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

86f6cb48d5feeb2f858554c0236057ed

இந்நிலையில், இப்படத்தை ஹிந்தியில் மீண்டும் பார்த்திபன் இயக்கவுள்ளார். இப்படத்தில் அவர் நடித்திருந்த வேடத்தில் நடிகர் நவாசுதின் சித்திக் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இது தொடர்பான பேச்ச்சுவார்த்தைகள் தற்போது நடந்து வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் எனத்தெரிகிறது.

பாலிவுட்டில் நடிப்பு ராட்சனாக கருதப்படுவர் நவாசுதின். எனவே, பார்த்திபனின் வேடத்தை அவர் அவரின் ஸ்டைலில் அவர் சிறப்பாக செய்வார் என்பதில் சந்தேகமில்லை.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *