விஜயகாந்தின் மகன் திருமணத்தை நடத்தி வைக்கும் விவிஐபி யார் தெரியுமா?

Published on: January 17, 2020
---Advertisement---

2a866e6f640294d1528ee25c8580a7d3-1

கேப்டன் விஜயகாந்த் பிரேமலதா திருமணம் திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது போல விஜயகாந்த்-பிரேமலதாவின் மகன் திருமணமும் ஒரு விவிஐபி தலைமையில் நடைபெறும் என கூறப்படுகிறது

சமீபத்தில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனுக்கு கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் இளங்கோ என்பவரின் மகள் கீர்த்தனாவுக்கும் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இதனையடுத்து திருமணம் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விஜயகாந்தின் தனது மகன் திருமணத்தை பிரதமர் மோடி தலைமையில் நடத்த வேண்டும் என விரும்புகிறாராம் 

இதற்காக மத்திய அமைச்சர் மற்றும் பாஜக முக்கிய விஐபிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரதமரிடம் தேதி கேட்கவும் அவர் தேதி கொடுத்த பின்னரே திருமண தேதியை முடிவு செய்யவும் விஜயகாந்த் குடும்பத்தினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. விஜயகாந்த் மகன் திருமணத்திற்கு பிரதமர் தேதி கொடுப்பாரா அவரது தலைமையில் திருமணம் நடைபெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Comment