
தங்கர்பச்சன் இயக்கத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ் ஆகியோர் நடித்து 2002ம் ஆண்டு வெளியான திரைப்படம் அழகி. இப்படம் பலரையும் அழ வைத்தது. இப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. இப்படத்தில் சிறுவயது பார்த்திபனாக சதீஷ் என்கிற வாலிபர் நடித்திருந்தார்.
இவர் சேரன் நடிகராக அறிமுகமான ‘சொல்ல மறந்த கதை’ படத்தில் அவரின் தம்பியாகவும் நடித்திருந்தார். அதன்பின் பெரிதாக இவருக்கு வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. நீண்ட வருடங்களுக்கு பின் புதுமுக இயக்குனர் எஸ்.கே.மதி இயக்கத்தில் ‘கூட்டாளி’ என்ற படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் வெளியாகவே இல்லை.

இந்நிலையில், அவரின் தற்போதைய புகைப்படம் வெளியாகியுள்ளது. நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.



