
குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழ் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ கோபமாக டிவிட்டரில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக நாடெங்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராடி வருகின்றனர். வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தலைநகர் டெல்லியில் இதற்கெதிராக போராட்டங்களை போலிஸ் அராஜகமாக அடக்கியது.
இந்நிலையில் இது குறித்து பிரபல தமிழ் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ‘இந்தியாவை மதச்சாற்ற நாடாக நீடிக்க வைப்போம். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு மறுப்பு சொல்வோம். அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு 'நோ' சொல்வோம். இந்த பூமி எவனுக்கும், அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது’ என போராடும் மக்களுக்கு ஆதரவாக டிவிட் செய்துள்ளார்.



