Categories: latest news

ரஜினி, கமல், விஜய், அஜீத் மனைவிகளுக்கேத் தெரியாத ரகசியம்… அவருக்குத் தான் தெரியுமாம்..! என்னங்கடா இது?

சினிமா என்பது சிறந்த பொழுதுபோக்கு சாதனம். இந்த அற்புதமான அறிவியலின் வாயிலாக சிறந்த கருத்துகளையும் வெகு எளிதாக மக்கள் மத்தியில் கடத்தலாம். அதே நேரம் இதன் மூலம் புதிய புரட்சிகளையும் உருவாக்கலாம். அப்படிப்பட்ட இந்த சினிமாவிற்கு 24 வகையான கிராப்ட்கள் தேவைப்படுகிறது. அது ஒளிப்பதிவு, நடிப்பு, இசை, இயக்கம், ஒலிப்பதிவு, ஆர்ட், தயாரிப்பு நிர்வாகம், எடிட்டிங் உள்பட அந்த 24 கிராப்ட்களும் தங்கள் வேலையைக் கனகச்சிதமாக செய்யும்போது தான் திறமையான சினிமா உருவாகிறது. அதைப் பார்த்துத் தான் நாமும் ரசிக்கிறோம்.

பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்கும்போது ஒரு சுவாரசியமான தகவலைத் தெரிவித்துள்ளார். அதில் ஆங்கர் ஒருவர் சினிமாத்துறையில் 24 கிராப்ட் னு சொல்றாங்க. அதுல எது முக்கியம் என்று கேட்கிறார். அதற்கு இப்படி பதில் சொல்கிறார் அந்தனன். என்னன்னு பார்ப்போமா…

சினிமாவைப் பொருத்தவரை 24 கிராப்ட்ஸ்சும் இல்லன்னா ஒரு படத்தை எடுக்கவே முடியாது. அதுல இது முக்கியம். இது முக்கியமல்லன்னு ஒதுக்கவே முடியாது. மண்ட வறண்டு போய் உட்கார்ந்து இருக்கும்போது ஒரு டீன்னு கேட்டா ஓடி வந்து கொடுப்பான் புரொடக்ஷன் பாய். வீட்டுல வைஃப் கிட்ட கேட்டா கூட ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்கன்னு சொல்வாங்க.

சூட்டிங் ஸ்பாட்ல நீங்க கேட்டீங்கன்னா அடுத்த ரெண்டாவது செகண்ட் கொண்டு வந்து கைல கொடுத்துடுவான். என்ன கேட்டாலும் சரி. ஒரு ஆர்டிஸ்டைக் கூலா வச்சிக்கணும்கறது தான் அந்த டிப்பார்ட்மெண்ட்டுக்குக் கொடுக்கப்பட்ட வேலை.

ஜூஸ் கேட்டாலும் வரும். என்ன கேட்டாலும் வரும். ஒண்ணுமில்ல. புரொடக்ஷன்ல ஒர்க் பண்ற ஒரு பையன் சாப்பாடு பரிமாறுறான். நீங்க அவன்கிட்ட கேட்டீங்கன்னா ரஜினி என்ன சாப்பிடுவாரு? கமல் என்ன சாப்பிடுவாரு? அஜீத் என்ன சாப்பிடுவாரு? விஜய் என்ன சாப்பிடுவாருன்னு தெரிஞ்சி வச்சிருப்பான். அவங்க அவங்க மனைவிகளுக்குக் கூட தெரியாது. கரெக்டா தெரியும்.

இவருக்கு சப்பாத்தி வச்சா குருமா பிடிக்காது. அவருக்கு வேற ஒண்ணு தான் பிடிக்கும். அந்த அளவுக்கு அவன் தெரிஞ்சி வச்சிருப்பான். இவருக்கு இது பிடிக்கும் பிடிக்காதுன்னு. இது மிகப்பெரிய விஷயம். பெரிய ஆர்ட். நமக்கு சாப்பாடு பரிமாறுறவன் தானேன்னு தெரியும். ஆனா அதுக்குள்ள ஒரு ஆர்ட் இருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ராம் சுதன்

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

1 hour ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

13 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

14 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

15 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

16 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

22 hours ago