விருதுநகர் மாவட்டத்தில் 11 மாதக் குழந்தையை ஒருக் குடும்பமே சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அமல்ராஜுக்கும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது அந்த பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களின் நெருக்கத்தால் அந்த பெண் கர்ப்பமானதால் உறவினர்கள் இருவரும் சேர்ந்து அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
அமல்ராஜின் மனைவிக்கு அவரது மாமன் மகன் ஒருவரோடு வேறு தொடர்பு இருந்ததாகவும் இந்த குழந்தை அவருக்குப் பிறந்ததாக இருக்கலாம் என அமல்ராஜ் சந்தேமடைந்துள்ளார். இதனால் அவரும் அவரது குடும்பத்தாரும் குழந்தையைக் கவனிக்கவில்லை. இதையடுத்து அமல்ராஜ் அந்த குழந்தையைக் கொலை செய்துவிட்டால் நாம் இருவரும் சந்தோஷமாக வாழலாம் என அந்த பெண்ணுக்கு அறிவுரை சொல்லியுள்ளார்.
இதையடுத்து அமல்ராஜ் மற்றும் அவரது பெற்றோர் காவல் காக்க, பெற்ற தாயே அந்த பெண்ணை கிணற்றில் மூழ்க வைத்துக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் எப்படியோ போலிஸுக்குத் தெரிய வர,அந்த பெண்ணின் அப்பா, அமல்ராஜ்தான் கொலை செய்ததாக சொல்லியுள்ளார். இதன் பிறகு போலிஸார் நடத்திய விசாரணையில் குடும்பமே சேர்ந்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…
பொதுவாக பொங்கல்,…