குடியுரிமை சீர்திருத்த சட்டம் குறித்து கருத்து கூறாமல் வாய் திறக்காமல் ஏன் கோழைகளாக இருக்கின்றீர்கள் என்று பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்
மத்திய அரசின் குடியுரிமை சீர்திருத்த சட்டம் குறித்து தான் பாலிவுட்டில் உள்ள கான் நடிகர்கள் இன்னும் எந்தவித கருத்தையும் சொல்லவில்லை. இவ்வளவுக்கும் ஜாமியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் தான் இந்த கான் நடிகர்கள் என்பது குறிப்பிடப்பட்டது. அந்த பல்கலையின் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கூட கருத்து தெரிவிக்காமல் அவர்கள் மௌனமாக இருப்பது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய கங்கனா ரணாவத் ’பாலிவுட் நடிகர்கள் தங்களை தாங்களே கலைஞர்கள் என்று கூறிக்கொண்டு எதிலும் தலையிடாமல் இருக்கின்றார்கள் என்றும் மக்களால் உருவாக்கப்பட்ட இவர்கள் மக்களுக்காக குரல் கொடுப்பதற்காக ஏன் பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்
மக்களுக்காக குரல் கொடுக்க பயப்பட்டால் அவர்கள் கலைஞர்களாக இருக்க தகுதியற்றவர்கள் என்று விளாசிய கங்கனா ரனாவத், பெரிய நடிகர்கள் அனைவரும் சினிமாவில் மட்டுமே ஹீரோக்கள் உண்மையில் அவர்கள் கோழைகள், முதுகெலும்பு இல்லாதவர்கள் என்று கூறியுள்ளார்
குடியுரிமை சட்டம் குறித்து பெரிய நடிகர்கள் தங்களது கருத்தை கண்டிப்பாக கூற வேண்டும் என்றும் அது ஆதரவு கருத்தோ அல்லது எதிர்ப்பு கருத்தோ, அது பிரச்சினை இல்லை என்றும், ஆனால் அவர்கள் ஏதாவது ஒரு கருத்தை கூறியிருக்க வேண்டும் என்று கங்கனா ரணாவத் கூறியுள்ளார். பாலிவுட் மட்டுமின்றி கோலிவுட்டிலும் பிரபல நடிகர்கள் யாரும் இது குறித்து வாயை திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
VijayTv: விஜய்…
விஜய் 69…
சினிமாவிலும் சரி…
Sivakarthikeyan: இசை…
ஜெயம் ரவி…