ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்  ?- ஷாருக் கானுக்கு ரசிகர்கள் கேள்வி !

Published On: December 17, 2019
---Advertisement---

d3c7388e7938d25a2e05d5972c917329

டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்தில் நடக்கும் தாக்குதல்களைக் கண்டித்து பாலிவுட் கான் நடிகர்கள் குரல் கொடுக்க வேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன.

மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத்துக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. வடகிழக்கு மாநிலங்களைப் போல மேற்கு வங்கத்திலும் போராட்டம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இது போல தலைநகர் டெல்லியிலும் ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட அவர்கள் மேல் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைப் போலிஸார் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் இந்திய சூப்பர்ஸ்டார் நடிகர்களில் ஒருவரும் ஜாமியா பல்கலை கழகத்தின் முன்னாள் மாணவர்களில் ஒருவருமான ஷாருக் கான் மாணவர்களுக்கு ஆதரவாக பேசவேண்டும் என ரசிகர்கள் டிவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும் அமீர் கான் மற்றும் சல்மான் கான் போன்றவர்களும் இது சம்மந்தமாக பேச வேண்டும் என்றும் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்.

Leave a Comment