மார்ச் 1 ஆம் தேதிக்குப் பின்னர் வெளிநாடு சென்று வந்தவர்களின் வீடுகளில் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா சந்தேகம் உள்ளதால் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற ஸ்டிக்கரை ஒட்டி அருகாமையில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இந்த போஸ்டர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளதால சர்ச்சை உருவாகியுள்ளது. அந்த வீடு தற்போது கமலின் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. கமல் சமீபகாலமாக வெளிநாடுகளுக்கு எதுவும் சென்று வரவில்லை என்பதால் ஏன் அந்த போஸ்டர் அங்கு ஒட்டப்பட்டது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பின்னர் சிறிது நேரத்தில் அந்த போஸ்டர் அகற்றப்பட்ட நிலையில் கமல் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘உங்கள் அன்புக்கு மிகப்பெரிய நன்றி. எனது வீட்டின் வெளியே ஒட்டப்பட்டிருந்த நோட்டீசை வைத்து நான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த முகவரியில் கடந்த சில ஆண்டுகளாக நான் வசிக்கவில்லை என்பதும், அங்கு மக்கள் நீதி மய்யம் அலுவலகம் செயல்பட்டு வருவதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. எனவே நான் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக வெளியான செய்தி உண்மை அல்ல. முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாகக் கடந்த இரண்டு வாரங்களாக நான் தனிமைப்படுத்தலை மேற்கொண்டு இருக்கிறேன். அனைவரும் தனிமைப்படுத்தலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதேசமயத்தில் செய்தியாளர்கள் செய்தி வெளியிடும்போது அதை உறுதி செய்துகொண்டு வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஆனால் இது சம்மந்தமாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளர் அணியினர் ‘அரசியல் எதிரிகளின் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக மாநகராட்சி ஊழியர்கள் வெறும் அம்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். அதன் காரணமாகவே இப்படி ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. எனவே இந்த அம்புகளை எய்த வில் யார் என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியின் இந்த செயலுக்குத் தமிழக முதல்வரும், சென்னை மாநகராட்சி ஆணையரும் மன்னிப்பு கேட்க வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.
விடாமுயற்சி படத்தின்…
Gossip: தமிழ்…
Naga chaitanya…
நடிகை சமந்தா…
Jayam ravi:…