அந்த வீடு தற்போது கமலின் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. கமல் சமீபகாலமாக வெளிநாடுகளுக்கு எதுவும் சென்று வரவில்லை என்பதால் ஏன் அந்த போஸ்டர் அங்கு ஒட்டப்பட்டது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தினர் மாநகராட்சி அதிகாரிகள் ‘சரியாகத்தான் ஒட்டப்பட்டிருகிறது’ என பதில் கொடுத்ததாக மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார். தற்போது அந்த நோட்டீஸை மாநகராட்சி ஊழியர்கள் நீக்கி விட்டனர்.
இந்நிலையில், இதுபற்றி விளக்கம் அளித்த மாநகராட்சி நிர்வாகம் ‘ கமல் வீட்டில் யாரோ சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பியுள்ளனர். கமலின் பழைய முகவரி என தெரியாமல் பாஸ்போர்ட் முகவரியை கொண்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. கமல் அங்கு வசிக்கவில்லை என தெரிந்ததும் கொரோனா நோட்டீஸ் அகற்றப்பட்டது’ என விளக்கம் அளித்துள்ளனர்.
கமலின் மகள் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் லண்டன் சென்று திரும்பினார். எனவே, தனது குடும்பத்தினர் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டதாக கூறியிருந்தார். எனவே, இதற்காகவே நோட்டீஸ் ஒட்டியிருக்கலாம் என கருதப்படுகிறது.
விடாமுயற்சி படத்தின்…
Gossip: தமிழ்…
Naga chaitanya…
நடிகை சமந்தா…
Jayam ravi:…