விக்ரம் மகன் வேடத்தில் துருவ் நடிக்க மறுத்தது ஏன்? பரபரப்பு தகவல்

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கி வரும் ‘கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் விக்ரம் மகன் கேரக்டர் ஒன்று உள்ளது என்றும் அந்த படத்தில் துருவ்வை நடிக்க வைக்க இயக்குனர் திட்டமிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

ஆனால் இந்த கேரக்டர் கதைக்கு முக்கியத்துவம் இன்றி  இருப்பதால் தான் நடிக்க முடியாது என்று துருவ் கூறிவிட்டதாக கூறப்படுகின்றது. இதனை அடுத்து தற்போது இந்த படத்தில் மலையாள நடிகர் சார்ஜன் என்பவர் நடிக்கவுள்ளார்.

அடுத்த வாரம் நடைபெறும் அடுத்தகட்ட படப்பிடிப்பில் சார்ஜன் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் இர்பான் பதான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது

Published by
adminram