இவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதன் முதன் காட்சியிலேயே ராஷி கண்ணா நிர்வாணமாக குளிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. அதேபோல், லிப்கிஸ் காட்சியும் இடம் பெற்றிருந்தது.
இதைத் தொடர்ந்து, படம் ஓட வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் காட்சிகள் வைக்கிறார்கள் என சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில், இதுபற்றி விளக்கம் கொடுத்துள்ள ராஷிகண்ணா ‘அந்த காட்சிகள் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்படவில்லை. மாறாக கலை கண்ணோட்டத்துடன் படத்திற்கு தேவை என்பதால் அக்காட்சிகள் எடுக்கப்பட்டன. எனவே, படத்தை பார்க்காமல் அந்த காட்சிகள் பற்றி எந்த முடிவும் எடுக்க வேண்டாம்’ என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுவாக பொங்கல்,…
இறுதிச்சுற்று சூரரைப்போற்று…
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…