அஜீத் ஏன் படவிழாக்களில் கலந்து கொள்வதில்லை? சீக்ரெட் சொன்ன பிரபலம்
அல்டிமேட் ஸ்டார் அஜீத் பொதுவாக எந்த ஒரு திரைப்பட விழாக்களிலோ அல்லது இசை நிகழ்ச்சிகளிலோ, விருது வழங்கும் விழாக்களிலோ கலந்து கொள்ள மாட்டார். அதற்கு என்ன காரணம் என்று இன்று வரை புரியாத புதிராக இருந்தது.
அது அவரது தனிப்பட்ட விருப்பம். என்றாலும் இதை நாம் சொல்வதை விட ஒரு பிரபலம் சொன்னால் இன்னும் தெளிவாக நமக்கு விளங்கும். அந்த வகையில் அஜீத் தனது விடாமுயற்சியால் படிப்படியாக திரையுலகில் முன்னேறியவர் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.
Also Read : அசர்பைசானுக்கு ஒரு கும்பிடு!.. ஒருவழியா முடிவுக்கு வரும் விடாமுயற்சி!.. நடப்பது இதுதான்!..
தன் ரசிகர்களைக் கூட முதலில் அப்பா, அம்மா, குடும்பம், குழந்தைகள் என்று பாருங்க. அதன்பிறகு படத்தைப் பாருங்க. ரசிகர் மன்றம் தேவையில்லை என்று தெளிவாக சொல்லி இருக்கிறார். அவர் தனக்கென தனி பாதையை வகுத்துக் கொண்டு திரையுலகில் வெற்றி நடை போடுபவர்.
என்றாலும் அவர் படவிழாக்களில் கலந்து கொள்ளவில்லை என்பது மட்டும் அல்ல. மற்ற நடிகர்களைப் போல அவர் இல்லையே என்றும் கேள்வி எழுகிறது. இதற்கான பதில் என்னன்னு வாங்க பார்க்கலாம்.
அஜீத் கடைசியாக கலந்து கொண்ட ஆடியோ லாஞ்ச் பங்ஷன் எது? இந்த வயதிலும் உலகநாயகனும், சூப்பர்ஸ்டாரும் போட்டி போட்டுக்கொண்டு திரைப்பட விழாக்களில் கலந்து கொள்கின்றனர். ஒரு ஹீரோவோட பேசிக் ரெஸ்பான்சிபிலிட்டியான இதைக்கூட அஜீத் ஏன் நிறைவேற்றவில்லை?
அவரை தயாரிப்பாளர் யாரும் கலந்துக்கச் சொல்லி அழுத்தம் கொடுக்க மாட்டார்களான்னு கேட்கிறார் ஒரு நேயர். அதற்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் அளித்த பதில் இதுதான்.
ஒவ்வொரு நடிகர்களும் தங்களுக்கு என்று தனித்தனி கொள்கையை வைத்திருக்காங்க. திரைப்பட விழாக்களிலோ அல்லது திரைப்படங்களை விளம்பரப்படுத்துவதற்கு நடத்தப்படுகின்ற விழாக்களிலோ கலந்து கொள்வதில்லை என்பதைக் கொள்கை முடிவாக வைத்திருப்பவர் தான் அஜீத்.
அவரை ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்யும்போது நான் நிச்சயமாக விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகிறேன் என்று சொல்லிவிட்டு அதற்குப் பிறகு அவர் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் வரலைன்னா அவர் பேர்ல குறை சொல்லலாம்.
Also Read : வேட்டையன் வர்றார்... அஜீத் படம் தீபாவளிக்கு வராததற்கு இதுதான் காரணமா?
அவரைப் பொறுத்தவரைக்கும் ஒரு திரைப்பட தயாரிப்பாளர் ஒப்பந்தம் செய்யும்போதே அந்தப் படத்தை விளம்பரப்படுத்துகின்ற எந்த நிகழ்ச்சியிலும் நான் பங்கேற்க மாட்டேன் என்று தெளிவாக அஜீத் சொல்லி விடுகிறார். அதனால இதுல அஜீத்தைக் குறை சொல்றதுக்கு எதுவுமே இல்லை என்பது தான் என்னுடைய எண்ணம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.