தேவா இசை அமைக்காததற்கு இதுதான் காரணமா? 2கே கிட்ஸ்சுக்குக் கொடுத்து வைக்கலையே..!
அண்ணாலை படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி என்ற டைட்டில் எழுத்துக்கு தீம் மியூசிக் போட்டு அசத்தியவர் தேனிசைத் தென்றல் தேவா. அன்று முதல் ரஜினி நடித்த அத்தனைப் படங்களுக்கும் அவர் பெயர் போடும்போது அந்த மியூசிக் தான் வரும்.
அந்த வகையில் பல படங்களுக்கு தேவா அருமையாக இசை அமைத்து இருப்பார். அனைத்துப் பாடல்களுமே சூப்பர்ஹிட்டாகத் தான் இருக்கும். இசையில் தேன் கலந்து விட்டதைப் போன்றும், அதைக் கேட்கும்போது நம்மைத் தென்றல் கடந்து போவதும் போல இருப்பதால் இவருக்கு 'தேனிசைத் தென்றல்' என்ற பெயர் வந்து விட்டது.
அப்படிப்பட்ட அருமையான இசை அமைப்பாளர் தான் தேவா. கானா பாடுவதிலும் இவர் கில்லாடி. பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் நேயர் ஒருவர் தேவாவைப் பற்றிக் கேள்வி கேட்டார். அதற்கு அவர் என்ன பதில் சொல்கிறார் என்று பார்க்கலாமா...
தேவா நல்ல பாடல்களுக்கு இசை அமைக்கக்கூடியவர். வருஷத்துக்கு 20 படங்களுக்கு மேல் இசை அமைக்கக்கூடியவர். இபபோ அவ் இசை அமைக்கவில்லையே அதற்கு என்ன காரணம்? வாய்ப்புகள் அமையலையா? அப்படின்னா என்ன காரணம்னு நேயர் ஒருவர் கேட்டார்.
இளையராஜா வருஷத்துக்கு 50 முதல் 60 படங்கள் வரை இசை அமைத்தார். ஆனால் இப்பொழுது ஏன் அப்படி இசை அமைக்கவில்லை? அதே போல ஏ.ஆர்.ரகுமான் வருஷத்துக்கு 15 படங்கள் வரை இசை அமைத்தார். அத்தனைப் படங்களும் இப்போது வருதா?
எவ்வளவு தான் பிரபலமான கலைஞராக இருந்தாலும், திறமையான கலைஞராக இருந்தாலும் ஒரு காலகட்டத்தில் உங்களுக்கு வாய்ப்புகள் குறைவதைத் தவிர்க்க முடியாது என்பது தான் உண்மை.
தேவாவின் இசையில் அண்ணாமலை, காதல் கோட்டை, காலம் எல்லாம் காதல் வாழ்க, ஆசை, வாலி, குஷி, அவ்வை சண்முகி, கண்ணெதிரே தோன்றினாள், பாட்ஷா, நேருக்கு நேர், பகவதி ஆகிய படங்களில் உள்ள பாடல்களைக் கேட்டுப் பாருங்கள். அப்படியே சொக்கிப் போய்விடுவீர்கள். இன்றைய 2கே கிட்ஸ்களுக்குத் தான் இந்தப் பாடல்களை எல்லாம் கேட்டு ரசிக்கக் கொடுத்து வைக்கவில்லை. இப்போதும் ஒரு குறையும் இல்லை. அவர்கள் யூடியூப்பில் கேட்டு மகிழலாம்.