மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்த ‘சைக்கோ’ திரைப்படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் ஒரு பெண்ணால் பாதிக்கப்பட்ட சைக்கோ கொலைகாரன் பெண்களை தொடர்ச்சியாக கடத்திச்சென்று கொடூரமாக செய்யும் காட்சிகள் காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் பெண்களை சைக்கோ கடத்தி செல்லும் போது அவை ஏன் சிசிடிவி கேமராவில் பதிவாகவில்லை. ஒரு இடத்தில் கூட சிசிடிவி கேமாரா கூட இருக்காதா என லாஜிக் பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக வெளியான ஒரு வாட்ஸ் அப் மேசேஜை உதயநிதி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ‘ சைக்கோ திரைப்படம் ராம்குமார் வயரை கடித்த காலம், கொடநாடு கொள்ளை நடந்த காலம், ஜெயலலிதா அப்போலோவில் இருந்த போது எடுத்த படம் என்பதால் எங்கும் சிசிடிவி கேமரா இல்லை’ என கிண்டலாக கூறப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…