More

சல்மான் கான் படங்களுக்கு ஏன் இசையமைப்பது இல்லை –ரஹ்மானின் அசத்தல் பதில்

நடிகர் சல்மான் கான் படங்களுக்கு ஏ ஆர் ரஹ்மான் அதிகமாக இசையமைத்தது இல்லை என்பது பாலிவுட்டின் ஒரு சுவாரஸ்யமான செய்தி.

Advertising
Advertising

ரோஜா படத்தின் இந்தியா முழுவதும் பிரபலமான ரஹ்மான் வரிசையாக பாலிவுட் படங்களுக்கும் இசையமைக்க ஆரம்பித்தார். வரிசையாக எல்லா சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்த அவர் சல்மான் கான் படங்களுக்கு ஆரம்பம் முதலே அதிகமாக இசையமைக்கவில்லை.

இதுகுறித்து ஒரு வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. பட ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சல்மான் கான் ரஹ்மானிடம் எப்போது என் படங்களுக்கு எல்லாம் இசையமைப்பீர்கள் என்று கேட்க ரஹ்மான் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். அதே கேள்வியை பத்திரிக்கையாளர் ஒருவரும் கேட்க ‘அவர்(சல்மான்) எனக்குப் பிடித்த மாதிரி படங்களில் நடிக்கும்போது’ எனக் கூறுகிறார்.

ரஹ்மானின் இந்த பதில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் அடுத்தவர்களின் வாய்ப்பைத் தட்டிப்பறிப்பதாகவும் கோலோச்சுவதாகவும், சல்மான் கானின் சகோதரர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ரஹ்மானின் வாய்ப்பைப் பறிப்பதாக நிர்பந்தம் செய்தது கூட சல்மான் கானாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

Published by
adminram

Recent Posts