அஜித் ஏன் பேட்டி கொடுப்பதில்லை? – கோபிநாத் கூறிய பகீர் காரணம்

நடிகர் அஜித் சினிமாவில் நடிக்க வந்த புதிதில், வளரும் நேரத்தில் பேட்டிகள் கொடுத்தார். சினிமா விழாக்களிலும் கலந்து கொண்டு பேசினார். ஆனால், கடந்த சில வருடங்களாக அவர் பேட்டியும் கொடுப்பதில்லை. சினிமா விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை. 

இந்நிலையில், இதுபற்றிய ரகசியத்தை உடைத்த கோபிநாத் ‘அஜித்தை நான் ஒரு முறை பேட்டி எடுத்தேன். அப்போது அவர் யோசித்து யோசித்து மிகவும் மெதுவாக பேசினார். நான் கேமராவை அணைத்து விட்டு இப்படி பேசாதீர்கள்’ என்றேன். அதற்கு அவர்  ‘எனக்கு தமிழ் சரியாக பேச வராது. எந்த வார்த்தையையும் அர்த்தம் புரிந்தே பேசுவேன். ஆனால், தமிழே பேச தெரியாத இவர் தமிழ் நடிகரா? என்று கிண்டலடித்தனர். எனவே, ஆங்கிலத்தில் பேசினேன். தமிழ் நடிகராக இருந்து கொண்டு ஆங்கிலத்தில் பேசுகிறார் என்றனர். 

பேட்டியே கொடுக்கவில்லை எனில் பெரிய நடிகர் என்கிற திமிர் என்கிறனர். என் வாழ்க்கையில் ஒவ்வொன்றையும் நானே கற்றுக்கொண்டுதான் வந்திருக்கிறேன் எனக்கூறினார். 

எனவே, அவரின் அமைதிக்கும், பேட்டிகள் கொடுக்காமல் இருப்பதற்கும் இதுதான் காரணம் என கோபிநாத் கூறினார். 

Published by
adminram