அதன்பின் திடீரென செய்தியாளர்கள் சந்திப்பில் அவரை பார்க்க முடியவில்லை. அவருக்கு பதிலாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் தமிழக தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோரை கொரோனா குறித்த தகவல்களை தினமும் செய்தியாளர்களிடம் பேசி கூறிவந்தனர்.
கொரொனா நடவடிக்கையில் விஜய பாஸ்கர் மக்களிடம் நல்ல பேர் வாங்கிய நிலையில், இது விஜயபாஸ்கர் மாநிலம் என மீம்ஸ்கள் உருவானதால் கடுப்பான அதிமுக தலைமை அவருக்கு தடை போட்டதாக செய்திகள் கசிந்தது.
இந்நிலையில், வெகுநாட்களுக்கு பின் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இவ்வளவு நாட்களாக செய்தியாளரை சந்தித்து பேட்டி கொடுக்கவில்லை என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் கூறிய விஜயபாஸ்கர் ‘நான் பல மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது, வீடியோ கான்ஃபரன்சிங் செய்ய வேண்டியிருந்தது. அதனால்தான் முதல்வர் உத்தரவுபடி சுகாதாரத்துறை செயலாளர் கொரோனா குறித்த புள்ளி விவரங்களை வழங்கி வந்தார். இதுதானே தவிர, வேறு விதமான சிந்தனைக்கு நீங்கள் செல்லவேண்டாம்’ என அவர் பதிலளித்தார்.
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…