2020ஆம் ஆண்டை 20 என சுருக்கமாக ஏன் எழுதக்கூடாது: ஒளிந்திருக்கும் ரகசியம்

கடந்த பல ஆண்டுகளாக தேதி, மாதம், ஆண்டு எழுதும்போது ஆண்டை மட்டும் கடைசி இரண்டு எண்களை மட்டுமே எழுதும் பழக்கம் பலருக்கு இருந்திருக்கலாம். இத்தனை ஆண்டுகளாக அவ்வாறு எழுதுவதில் எந்த பிரச்சனையும் இருந்திருக்காது. ஆனால் வரும் 2020ஆம் ஆண்டு 20 என சுருக்கமாக எழுதினால் பல பிரச்சனைகள் ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது 

உதாரணமாக 2019ஆம் ஆண்டில் 19 என்று எழுதினால் அது 2019 என்று தான் புரிந்து கொள்ளப்படும். அதில் எந்தவித குழப்பமும் இருக்காது. ஆனால் இனி வரும் 2020ஆம் ஆண்டில் 20 என்று எழுதினால் அது 2000 ஆண்டாக தவறாக புரிந்துகொள்ள வாய்ப்புகள் அதிகம். எனவே இந்த குழப்பத்தை தவிர்க்க 2020 ஆம் ஆண்டு முழுவதும் முழுமையான நான்கு இலக்க எண்களாக 2020 என எழுதும்படி அனைவரும் அறிவுறுத்தப்படுகிறார்கள்

அதுமட்டுமின்றி வெறுமனே இரண்டு இலக்க எண்ணாக 20 என்று மட்டும் எழுதினால் அதன் பின் இரண்டு இலக்க எண்கள் இணைத்து முறையீடு செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. உதாரணமாக 20 என்று எழுதிவிட்டால் அதன் பக்கத்தில் 18 என்று யாராவது எழுதிவிட்டால் அது 2018 ஆக மாற்றப்படும் அபாயம் உள்ளது 

எனவே இதுபோன்ற குழப்பத்தை தவிர்க்க அடுத்த ஆண்டு முழுவதும் 2020 என்று எழுதுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.ஆமா; அதே நேரத்தில் 2021 ஆம் ஆண்டு இந்த குழப்பம் வராது என்றும் வழக்கம் போல் கடைசி இரண்டு எண்களை மட்டும் அந்த ஆண்டு எழுதலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram