துக்ளக் விழாவில் பெரியார் பற்றி ரஜினி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 1971ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் ராமன் மற்றும் சீதை சிலையை திகவினர் செருப்பால் அடித்து அசிங்கப்படுத்தியதாகவும், அதை துக்ளக் பத்திரிகையில் சோ எழுதியதாகவும் ரஜினி பேசியிருந்தார்.
ஆனால், அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை எனவும், ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் திகவினர் கூறினார். ஆனால், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என ரஜினி தெரிவித்து விட்டார்.
இந்நிலையில், இதுபற்றி டிவிட் செய்துள்ள நடிகை குஷ்பு ‘ரஜினி கூறுவது சரியோ தவறோ அவர் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறார். பயம் இல்லாமல் தனது நிலையில் உறுதியாக இருக்கும் அவருக்கு எனது பாராட்டுகள் என்று கூறியிருந்தார். இதற்கு நெட்டிசன் ஒருவர் ‘ரஜினியுடன் படத்தில் நடிப்பதால் அவருக்கு ஆதரவாக பேசுகிறீர்களா? ஒருவர் பேசுவது தவறு என தெரிந்தும் அவருடன் நடிப்பதால் அவர் கூறியது சரி என கூறுவது சரியா?’ என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் கூறியுள்ள குஷ்பு ‘அட லூசு பசங்களே.. ரஜினி கூட ஏற்கனவே நடிச்சு முடிச்சிட்டேண்டா. எனக்கு இது புதுசு இல்ல.. ஏண்டா முட்டாள்னு நிருபீக்கிறீங்க’ என பதிவிட்டுள்ளார்.
திரையுலகில் ஒரு…
நடிகர் சிவக்குமார்…
இந்திய சினிமாவில்…
கடந்த 10…
1960களில் தமிழகத்தின்…