
குடியுரிமை சட்டம் குறித்து ரஜினிகாந்த் கூறியுள்ளது அச்சு அசல் பாஜகவின் கருத்து போலவே இருப்பதாகவும் இன்னும் ஏன் இந்த முகமூடி என்றும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ரஜினிக்கு தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்
குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் தெரிவித்த கருத்துக்கு ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின், சீமான் உள்பட பல அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது கரூர் எம்பி ஜோதிமணி தனது கருத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அவர் கூறியதாவது: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலைகளுக்குப் பிறகு ரஜினி பேசியதன் மறுபதிப்பே இது. மக்களின் அடையாளங்கள்,உரிமைகள்,உணர்வுகள் அழித்தொழிக்கப்படுவதும்,மாணவர்கள் மீது ஏவப்பட்ட அரச வன்முறையும் இவருக்கு ஒரு பொருட்டே அல்ல!அச்சு அசல் பிஜேபி கருத்து. இன்னும் எதற்கிந்த முகமூடி?
காங்கிரஸ் எம்பியின் ஜோதிமணியின் கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கண்டனங்களையும் திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆதரவும் தெரிவித்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக குடியுரிமை சட்டம் குறித்து ரஜினிகாந்த் தனது டுவிட்டரில், ‘எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது என்றும் தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றும் இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு வேதனை அளிக்கிறது என்று கூறியிருந்தார்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலைகளுக்குப் பிறகு ரஜினி பேசியதன் மறுபதிப்பே இது. மக்களின் அடையாளங்கள்,உரிமைகள்,உணர்வுகள் அழித்தொழிக்கப்படுவதும்,மாணவர்கள் மீது ஏவப்பட்ட அரச வன்முறையும் இவருக்கு ஒரு பொருட்டே அல்ல!அச்சு அசல் பிஜேபி கருத்து. இன்னும் எதற்கிந்த முகமூடி?! pic.twitter.com/uoYUO0QIZP
— Jothimani (@jothims) December 19, 2019

Leave a Reply