More

ஏன் இந்த அடக்குமுறை: கங்குலிக்கு பிரபல நடிகை கண்டனம்!

மத்திய அரசின் குடியுரிமை சீர்திருத்த மசோதா குறித்து சமீபத்தில் சவுரவ் கங்குலியின் மகள் சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை குவிந்தது. குறிப்பாக எதிர்ப்பு கருத்துக்கள் மிக அதிகமாக பதிவானது.

Advertising
Advertising

இதனை அடுத்து கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில் தனது மகள் சின்னப் பெண் என்றும், அவள் எந்த விதமான பதிவையும் இன்ஸ்டாகிராமில் செய்யவில்லை என்றும், அவளை விட்டு விடுங்கள் என்றும் கூறியிருந்தார்

இந்த நிலையில் இதுகுறித்து தனது டுவிட்டரில் கருத்து கூறிய பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான நக்மா, ‘கங்குலி அவர்கள் தனது மகளை சுதந்திரமாக சிந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அவர் ஓட்டுப்போடும் வயது வந்துவிட்டதால் அவர் தனது தரப்பு கருத்தை வெளி உலகிற்கு தெரிவிக்கலாம் என்றும், மகளாக இருந்தாலும் அடக்குமுறை செய்து அவரை நிர்ப்பந்திக்க வேண்டாம், கங்குலி இவ்வாறு செய்திருக்க கூடாது என்றும் இனிமேலாவது கங்குலி தனது மகளை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பார் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். நக்மாவின் இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகை நக்மா சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பாட்ஷா உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

Published by
adminram