More
Categories: Cinema News latest news

டிடியை கழித்து கட்டியதா விஜய் டிவி….? ஷிவாங்கிக்கு வாய்ப்பு கொடுத்ததில் உள்ள ரகசிய அரசியல்!

கடந்த சில நாட்களாகேவ தொகுப்பாளினி பிரியங்கா விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். நகைச்சுவை, பாடுவது, ஆடுவது என பல திறமைகளை கொண்டிருக்கும் பிரியங்கா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் பிக்பாஸ் 5 சீசனில் கலந்துகொள்ள இருக்கிறார் என்ற செய்தி உறுதிப்படுத்தும் வகையில் வெளிவந்துக்கொண்டிருக்கிறது.

Advertising
Advertising

ஆம், பிரியங்கா பிக்பாஸுக்கு செல்வதால் அவர் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சிகளை குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி தொகுத்து வழங்கவுள்ளார். இதனை ஷிவாங்கியே தனது இன்ஸ்டாகிராமில் ஆங்கர் ஷிவாங்கி என தனக்காக விஜய் டிவி நிர்வாகம் கொடுத்துள்ள அறையை காண்பித்து பதிவிட்டிருந்தார்.

shivangi

விஜய் டிவியில் எல்லோருக்கும் சீனியராக இருக்கும் டிடியை தேர்வு செய்யாதது ஏன் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது . அதாவது ஷிவாங்கி மிகவும் நகைச்சுவை கொண்ட பெண் என்பதும் டிடியை விட இப்போது ஷிவாங்கிக்கு தான் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதாலும் ஷிவாங்கியை ஆங்கராக்கியுள்ளதாம் விஜய் டிவி. சீனியரா இருந்தாலும் யாரை போட்டால் TRP எகிறும் என்பதை தெள்ளத்தெளிவாக தெரிந்துக்கொண்ட விஜய் டிவி ஷிவாங்கிக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டது.

Published by
adminram

Recent Posts