டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்புணர்வு செய்து அவரைக் கொடூரமாகக் கொலை செய்தது இந்தியாவையே உலுக்கியது. அந்த வழக்கில் ஒரே ஒரு மைனர் சிறுவனைத் தவிர மற்றவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதில் ஒரு குற்றவாளி சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார்.
மற்ற நான்கு பேருக்கும் பல முறை தூக்குத் தண்டனை தேதி நிர்ணயிக்கப்பட்டும் பல காரணங்களால் தள்ளிப்போனது. இந்நிலையில் மார்ச் 20 ஆம் தேதி தூக்கில் போடுவது உறுதி என்று சிறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். அதற்கான ஒத்திகை இன்று சிறையில் நடத்தப்பட்டது.
இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமார் சிங் என்பவரின் மனைவி புனிதா தான் விதவையாக வாழ விரும்பவில்லை என்றும் அதனால் தனக்கு விவாகரத்து வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நாளை விசாரிக்க உள்ளனர். இதனால் தூக்குத்தண்டனை மீண்டும் தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகர் பார்த்திபன்…
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…