ஒரே ஒரு கேள்வி கேட்ட மனைவி – கர்ப்பிணி என்றும் பாராமல் கணவன் செய்த செயல்!

Published on: February 6, 2020
---Advertisement---

a3769f7dbe6ef834f94ee03a2d74cf88

திருச்சி அருகே முசிறியைச் சேர்ந்த கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறால் கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புல்லம்பாடியைச் சேர்ந்த ஜீவிதா என்ற பொறியியல் பட்டதாரி பெண் மலேசியாவைச் சேர்ந்த எஸ்.கமல்காந்த் என்பவரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் திருமணத்துக்குப் பின்னர் திரும்பவும் மலேசியாவுக்கு செல்லாமல் கமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதுகுறித்து இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இருவருக்கும் கடந்த 4 ஆம் தேதி மீண்டும் சண்டை வரவே கோபத்தில் கமல் ஜீவிதாவின் கழுத்தை நெறித்தும் அறுத்தும் கொலை செய்துவிட்டு தப்பிக்கப் பார்த்துள்ளார். அப்போது அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலிஸார் கமல்காந்தை கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட ஜீவிதா மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment