மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மந்திரவாதி… தட்டிக்கேட்ட கணவன் குத்திக்கொலை

Published On: January 2, 2020
---Advertisement---

0f61d0166378ea31232a66412ebfce8d

இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமச்சந்திரன்(30) என்பவர் பழக்கமாகியுள்ளார். இவருக்கு திருமணமாகவில்லை. அப்பகுதியில் மாந்திரீகமும், ஜோதிடமும்  கூறி வருகிறார். கிருஷ்ணனுக்கு உதவுவதாக கூறி ராமச்சந்திரன் தான் மாந்திரீகௌம், பரிகாரமும் செய்தால் பணம் கொட்டும் எனக்கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து அடிக்கடி கிருஷ்ணனின் வீட்டிற்கும் வர துவங்கியுள்ளார்.

அப்போது, வசந்தாவிடமும் பழகிய அவர், அவரின் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆபாசமாக பேச துவங்கியவர், வீட்டிற்கு வந்து பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வசந்தா இதுபற்றி கணவரிடம் கூற, கிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எனவே, ராமசந்திரனை போலீசார் நேரில் அழைத்து கண்டித்து அனுப்பியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன், நேற்று குடிபோதையில் கிருஷ்ணனின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது இருவரும் ஒருவரை ஒரு தாக்கிக் கொண்டனர். அப்போது திடீரென ராமசந்திரன் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால், குழப்பமடைந்த கிருஷ்ணன் அவரின் பின்னால் ஓடினார் அப்போது ஒரு இடத்தில் மறைந்திருந்த ராமச்சந்திரன் மறைத்து வைத்திருந்த கத்தியால் கிருஷ்ணனின் வயிறு, கை, கழுத்து உள்ளிட்ட பகுதியில் குத்தியுள்ளார். இதனால் அலறித்துடித்த கிருஷ்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே மரணமடைந்து விட்டார். 

எனவே, வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மந்திரவாதி ராமசந்திரனை தேடி வருகின்றனர்.

Leave a Comment