மனைவியின் நடத்தை சரியில்லை – ஜோதிடரின் பேச்சைக் கேட்டு கணவன் செய்த செயல் !

ஜோதிடர் ஒருவர் தனது வாடிக்கையாளரிடம் மனைவியின் நடத்தை சரியில்லை எனக் கூறியதை அடுத்து அவர் தன் மனைவியைக் கொலை செய்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள குலசேகரன் பட்டிணத்தைச் சேர்ந்த தம்பதிகள் மாரியப்பன் மற்றும் காளியம்மாள் தம்பதியினர். இவர்கள் புதிதாக ஒரு வீடு கட்ட முடிவு செய்து அது சம்மந்தமாக ஜோதிடர் ஒருவரிடம் சென்று ஆலோசனைக் கேட்டுள்ளார் மாரியப்பன்.

அப்போது ஜோதிடர் வீடு கட்டுவதைப் பற்றி சொல்லாமல் மாரியப்பனின் மனைவியின் நடத்தை சரியில்லை எனக் கூறியுள்ளார். இதை நம்பி ஆத்திரத்தோடு சென்ற மாரியப்பன், பருத்தி காட்டில் வேலை செய்து கொண்டிருந்த மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு வந்து தானும் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram