முகம் சிதைந்த நிலையில் மனைவி சடலம் : கள்ளக்காதலியுடன் கணவன் உல்லாசம் ! ராஜபாளையம் பரபரப்பு !

ராஜபாளையம் பகுதியில் முகம் சிதைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அவரது கணவரைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

ராஜபாளையத்தில் உள்ள கடந்த 7 ஆம் தேதி சங்கரபாண்டிபுரம் எனும் இடத்தில்  முகம் சிதைந்த நிலையில் பெண் ஒருவரின் பிணம் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து போலிஸார் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த் பழனியம்மாள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்துக் கொலைக்கான காரணம் குறித்து விசாரணையில் இறங்கிய போது கேரளாவில் வேலைப் பார்த்து வரும் அவரது கணவர் மேல் சந்தேகம் எழுந்துள்ளது. அவரைத் தேடிக் கண்டுபிடித்த போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் தன்க்கும் கேரளாவில் டி எஸ்டேட்டில் வேலைப் பார்க்கும் பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் அதைக் கண்டுபிடித்து சண்டைப் போட்ட மனைவியைக் கொலை செய்துவிட்டு மீண்டும் கேரளா வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து அவரைக் கைது செய்த போலிஸார் சிறையில் அடைத்துள்ளனர்.

Published by
adminram