’மாஸ்டர்’ படத்தில் விஜய்சேதுபதிக்கு பெண் பெயரா? கசிந்த தகவல்!

விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி கேரக்டர்களின் பெயர்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது

இந்த படத்தில் விஜய்க்கு ஜேம்ஸ் துரைராஜ் என்ற பெயரும், விஜய் சேதுபதிக்கு பவானி என்ற பெயரும், வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினரிடம் என்று தகவல்கள் கசிந்துள்ளது. ’மாஸ்டர்’ படத்தில் விஜய் சேதுபதி மாஸ் வில்லனாக நடித்து வரும் நிலையில் அவருக்கு பெண் பெயரா? என்ற கேள்வி எழுந்தாலும் இந்த பெயருக்கு பின்னால் நிச்சயமாக ஒரு காரணம் இருக்கும் என்றும், அந்த காரணத்தை படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வைத்திருப்பார் என்றும் கூறப்படுகிறது 

’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நெய்வேலியில் நடைபெற்று வருகிறது என்பதும் க்ளைமாக்ஸுக்கு முந்திய அதிரடி சண்டைக்காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. நெய்வேலி படப்பிடிப்பு முடிந்தவுடன் சென்னை திரும்பும் ’மாஸ்டர்’ படக்குழுவினர் கிளைமாக்ஸ் காட்சியை பிரமாண்டமாக படமாக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக தனியார் ஸ்டுடியோ ஒன்றில் செட் அமைக்கப்பட்டு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Published by
adminram