மீண்டும் வருமா இதுபோல ஒரு திரைப்படம்?.. பாகுபலி வெளியாகி 6 வருடங்கள்…. கொண்டாடும் ரசிகர்கள்…..

Published on: July 10, 2021
---Advertisement---

a63051e1ffd0fe8349addeabce94804b

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் தெலுங்கு , தமிழ், ஹிந்தி என 3 மொழிகளில் உருவான திரைப்படம் பாகுபலி. இப்படம் 2015ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி வெளியானது. இப்படம் வசூலில் சக்கை போடு போட்டது. இந்திய அளவில் இந்த திரைப்படம் ரூ.400 கோடியை வசூல் செய்தது. இப்படத்தின் மூலம் நடிகர் பிரபாஸ் பேன் இண்டியா நடிகர் ஆகிவிட்டார். எனவே, அவரின் திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் இயக்குனராக ராஜமவுலி உயர்ந்துள்ளார். தற்போது அவர் ஜுனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரணை வைத்து RRR படத்தை இயக்கி வருகிறார். 

இந்நிலையில், இப்படம் வெளியாகி இன்றோடு 6 ஆண்டுகள் ஆகிவிட்டதால் இணையதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதேபோல் பாகுபலி-2 2017ம் ஆண்டு வெளியான பாகுபலி 2 ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment