ஆஸ்கார் வாங்கிய படத்தின் மீது கேஸ் போடுகிறாரா கே எஸ் ரவிக்குமார் ?

Published on: February 14, 2020
---Advertisement---

fbe8e6d8175c248dfebf15dd66044ad8

ஆஸ்கார் வாங்கிய பாராசைட் படமும் விஜய் நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கிய மின்சாரகண்ணா படமும் ஒரே கதையைக் கொண்டது எனக் கோலிவுட்டில் செய்தி ஒன்று உலாவி வருகிறது.

முதல் முறையாக அமெரிக்காவில் தயாரிக்கப்படாத வேற்று மொழி படமான பாராசைட் ஆஸ்கார் விருதை வாங்கி சாதனைப் படைத்துள்ளது. ஒரு பணக்காரர் வீட்டில் வேலைக்கு சேரும் மகன் வரிசையாக தனது தாய், தந்தை மற்றும் சகோதரி ஆகியவர்களை அந்த வீட்டுக்குள் வேலைக்கு இழுப்பதும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் அந்த படத்தின் கதை. உலகம் எங்கும் உள்ள ஏழைப் பணக்கார ஏற்றத்தாழ்வை வலுவாகப் பேசியதால் உலகம் முழுவதும் இந்த படம் வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தில் உள்ள சில காட்சிகள் மின்சார கண்ணா என்ற கே எஸ் ரவிக்குமாரின் படத்தில் இருப்பது போலவே இருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் அந்த படம் மீது வழக்குத் தொடரப்படுமா என்ற கேள்விக்கு கே எஸ் ரவிக்குமார், அந்த படத்தின் உரிமை தயாரிப்பாளர் கே எல் தேனப்பனிடம் உள்ளது. அது சம்மந்தமாக அவர்தான் முடிவு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment