More

கடைசி நேர சொதப்பலால் குறைந்த ஸ்கோர் – 163 ரன்களுக்குள் நியுசிலாந்தை சுருட்டுமா இந்தியா ?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கோலிக்குப் பதிலாக ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது.

Advertising
Advertising

இந்திய அணியில்  ராகுலும் சஞ்சு சாம்சனும்  தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். சாம்சன் 2 ரன்களில் அவுட் ஆகி சொதப்ப அதன் பின் வந்த ரோஹித் ஷர்மாவும் ராகுலும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ராகுல் 45 ரன்களில் அவுட் ஆக, அதன் பின் ஸ்ரேயாஸ் ஐயர் வந்தார். கடைசி நேரத்தில் ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடிக் கொண்டிருக்கும் போது அவர் அடிபட்டு 61 ரன்களில் வெளியேறினார்.

அதன் பின்னர் வந்த ஷிவம் துபேவும் ஏற்கனவே களத்தில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயரும் ஆமைவேகத்தில்  ரன் சேர்க்க இந்தியாவால் பெரிய ஸ்கோரை எடுக்க முடியாமல் போனது. கடைசி நேரத்தில் மனிஷ் பாண்டே அதிரடியா விளையாடி 3 பந்துகளில் 11 ரன்கள் சேர்க்க இந்திய அணி 163 ரன்கள் சேர்த்தது.  

Published by
adminram

Recent Posts