அந்தாதூன் தமிழ் ரீமேக்கில் பிரசாந்துக்குக் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா அதிக சம்பளம் கேட்டதால் அவருக்கு பதில் வேறு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’அந்தாதூன்’ என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் பிரசாந்த் நடிக்க உள்ளார். இந்த படம் அவருக்கு ரீ எண்ட்ரி ஆக இருக்க வேண்டும் என கடுமையாக உழைத்து வருகிறார் படத்துக்கு இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள மோகன் ராஜா. பிரசாந்தோடு அந்த படத்தில் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நவரச நாயகன் கார்த்திக்கும் நடிக்க உள்ளார்.
படத்தின் இயக்குனர் மோகன் ராஜா, பிரசாந்துக்கு இப்போது பெரிய மார்க்கெட் இல்லாததால் கதாநாயகியாக நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்து அவரிடம் பேசியுள்ளார். ஆனால் பிரசாந்துக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்றால் சம்பளமாக 6.5 கோடி கேட்டுள்ளார். இது படத்தின் பட்ஜெட்டுக்கு நிகராக இருப்பதால் அவரை நீக்கிவிட்டு இப்போது வேறு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம் படக்குழு.
Nayanthara: சில…
Vetrimaran: விடுதலை…
தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்…
அஜீத் நடித்த…
Kollywood: சமீப…