செகண்ட் இன்னிங்ஸ் கைகொடுக்குமா பிரியாமணிக்கு?

Published on: June 3, 2021
---Advertisement---

f8df86da0961e60b19e7a3f1408b9d53

2007ல் வெளியான பருத்தி வீரன் படம் தான் பிரியாமணிக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம். இந்தப் படத்தில் கிராமத்துப் பெண் முத்தழகாக வரும் பிரியாமணி, துருதுருவென நடித்து நடிப்பில் தனி முத்திரை பதித்திருப்பார். அதனால் இப்படத்தில் அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

71fd74eba749d9deea94bf0278ec21c0

படத்தின் பாடல்களும் மெகா ஹிட் அடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் இது. நடிகர் கார்;த்திக்கு முதல் படம் இதுதான். அதன்பிறகு 2012ல் வெளியான சாருலதாவில் இரட்டை வேடங்களில் நடித்து கலக்கியிருப்பார் பிரியாமணி.

2017ல் முஸ்தபாராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தற்போது சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார், பிரியாமணி. தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளிலும் நடிக்கிறார். அதோடு, தி பேமிலிமேன் 2 வெப்சீரியலிலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

b0db477446c783a459f93fcbdff09a0f

சமீபத்தில் இவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‘செகண்ட் இன்னிங்சில் வலுவான கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். முக்கியமாக தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்கும் நாரப்பா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறேன். நான் எப்போதுமே வெங்கடேசுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுவேன். இவருடன் நடிப்பதற்கு முன்பு மூன்று முறை வாய்ப்பு வந்தபோது கால்ஷீட் பிரச்சினையால் நடிக்க முடியாமல் போனது. 

அதன் காரணமாகவே நாரப்பா பட வாய்ப்பு வந்தபோது பல படங்கள் கைவசம் இருந்தபோதும் மற்ற படங்களுக்கு கொடுத்திருந்த கால்ஷீPட்களை வாங்கி இந்த படத்திற்கு கொடுத்து நடித்தேன். வெங்கடேஷ் படம் என்பதால் மட்டுமே இந்த ரிஸ்க்கை எடுத்தேன்” என தெரிவித்துள்ளார்.

நாரப்பா திரைப்படம் தமிழ் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment