ரஜினிகாந்த்-அஜித் இன்று சந்திப்பா? கோலிவுட்டில் பரபரப்பு

adcc2bc2a4cbe6a0e19b93665e4de539

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தலைவர் 168’ படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பது தெரிந்ததே.

இதனை அடுத்து இந்த படத்தில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சூரி உள்பட பலர் நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. டி இமான் இசையில் உருவாகவுள்ள இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் படப்பிடிப்பு இந்த வாரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது

இதனை அடுத்து சற்றுமுன் வெளியான தகவலின்படி ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இன்று முதல் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாகவும் இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த், இயக்குனர் சிறுத்தை சிவா உள்பட பலர் கலந்து கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அதே ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அஜித்தின் ‘வலிமை’ படத்தின் படப்ப்பிடிப்பும் நடந்து வருகிறது. எனவே இன்று ரஜினி-அஜித் சந்திப்பு நிகழுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது

ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவிருக்கும் நிலையில் அவருடைய கட்சிக்கு அஜித் ஆதரவு தருவாரா? அவரது கட்சியில் அஜித் இணைவாரா? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு இன்றைய சந்திப்புக்கு பின் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

 

Related Articles

Next Story