ரஜினி படத்தில் இருந்து விலகுகிறாரா சூரி? பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. தற்போது குஷ்பு, மீனா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
இந்த நிலையில் இந்த படத்தில் சூரி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாகவும் அவர் கீர்த்தி சுரேஷின் அண்ணனாக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக அவர் மொத்தமாக இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளாராம் 

இந்த நிலையில் திடீரென வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படம் உறுதி செய்யப்பட்டு அந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து வெற்றிமாறன் படத்திற்கு அதிக நாட்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்பதற்காக ’தலைவர் 168’ படத்தில் கொடுத்த கால்ஷீட் தேதிகளை திரும்பப் பெற்று வெற்றிமாறனுக்கு கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது

இதனால் அதிருப்தி அடைந்த சிறுத்தை சிவா, சூரியை படத்திலிருந்து தூக்க முடிவு செய்துள்ளதாக ஒரு வதந்தி பரவுகிறது. இருப்பினும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Published by
adminram