டாஸ்மாக் கடைகளை மூட கிராம சபைக் கூட்டம் நிறைவேற்றினால் அதை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் முக்கியமானக் கேள்வியை எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் சரக்குகள் மிகவும் தரம் குறைந்தவை என்றும் குடிப்பவரின் உயிருக்கே ஆபத்து விளைவிப்பவை என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இதனால் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்ற கோரிக்கை அவ்வப்போது எழுந்து வருகிறது.
இந்நிலையில் கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட கிராம சபைக் கூட்டத்தில் ஆலோசனை நிறைவேற்றினால் அவற்றை மூட உத்தரவிடவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கின் இடைக்காலத் தீர்ப்பை வாசித்த நீதிபதிகள் ‘மக்கள் நலன் சார்ந்த அரசு, மக்களின் ஆரோக்கியம் சார்ந்த நலனையும் எண்ணி செயல்படவேண்டும். ஒரு இடத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூடலாமா? வேண்டாமா? என்ற அதிகாரத்தை கிராம சபைக் கூட்டம் போன்றவற்றுக்கு வழங்குவது குறித்து சட்டத்திருத்தம் கொண்டு வரக் கூடாதா?.’ இதைப்பற்றி அதிகாரிகள் விரைவில் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…